Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பாதுகாப்பு தளவாடங்கள் வாங்க ரூ.4,106 கோடியில் ஒப்பந்தம்

பாதுகாப்பு தளவாடங்கள் வாங்க ரூ.4,106 கோடியில் ஒப்பந்தம்

ஜிசாட்-7சி செயற்கைக்கோளுக்கான ரூ.2,563 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், பெங்களூருவைச் சேர்ந்த நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனத்துடன் கையெழுத்தானது.

பகிரவும் WhatsApp Facebook

இந்திய விமானப் படைக்கான பிரத்யேக தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-7சி, இந்திய கடற்படைக்கான வருணாஸ்திரா கனரக டார்பிடோக்களை கொள்முதல் செய்வதற்காக ரூ.4,106 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.

ஜிசாட்-7சி செயற்கைக்கோளுக்கான ரூ.2,563 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், பெங்களூருவைச் சேர்ந்த நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனத்துடன் கையெழுத்தானது. 

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள், இந்திய விமானப் படையின் மீள்திறன் கொண்ட, தடையற்ற தகவல் தொடர்பு திறன்களை மேம்படுத்தி, அதன் மூலம் செயல்பாட்டுத் திறனை வலுப்படுத்த உதவிடும்.

வருணாஸ்திராவுக்கான ரூ.1,543 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துடன் கையெழுத்தானது. வருணாஸ்திரா என்பது கடற்படை அறிவியல், தொழில்நுட்ப ஆய்வகத்தால் உருவாக்கப்பட்ட, கப்பலில் இருந்து ஏவப்படும் ஒரு உள்நாட்டு நீர்மூழ்கி எதிர்ப்பு டார்பிடோ வகையைச் சேர்ந்ததாகும். 

மேம்பட்டத் திறன்களைக் கொண்டுள்ள இந்த கப்பல், நீண்ட தொலைவில் உள்ள எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கும் திறன் கொண்டது. இதன் மூலம் இந்திய கடற்படையின் நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்த் திறனை இது மேம்படுத்துகிறது.

முந்தைய செய்தி
அபிஜீத் தீப்கே மீது அமெரிக்க பாடகி குற்றச்சாட்டு!
அடுத்த செய்தி
இத்தாலியில் விமானப் போக்குவரத்து 50% குறைப்பு

தொடர்புடைய செய்திகள்